தமிழ் பதிப்பு (Tamil Version)

சமூகத் தாக்கமுடைய இருவழித் தொடர்பு உத்தி விளையாட்டு

App Store Logo 200px Google Play Logo-2K

எர்த் கேர்ல் 2: சுனாமிக்குத் தயாராகுதல் என்பது இருவழித் தொடர்பு விளையாட்டு. இது சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்படும்போது, கரையோரங்களில் வசிப்போர் உயிர்பிழைக்கும் விகிதத்தை அதிகரிக்க சரியான உத்திகளைப் பயன்படுத்தி முடிவுகளை எடுப்பது குறித்ததாகும். இதில் விளையாட்டாளர் முதன்மைக் கதாபாத்திரமாகவும், எர்த் கேர்ல் விளையாட்டாளருக்கு வழிகாட்டியாகவும் இருப்பார்.

இந்த விளையாட்டு, சிங்கப்பூர் புவி கண்காணிப்பு நிலையத்தைச் சேர்ந்த விளையாட்டுக் கலைஞர்களாலும், விஞ்ஞானிகளாலும் கூட்டிணைந்து உருவாக்கப்பட்டது. எர்த் கேர்ல் 2 விளையாட்டு, உண்மை வாழ்க்கை சூழல்களை அடிப்படையாகக் கொண்டது. சுனாமிக்குத் தயாராகுதல், உயிர்பிழைக்கத் தேவையான உத்திகள் ஆகியவற்றை இந்த விளையாட்டு வலியுறுத்துகின்றது. ஆசியா முழுதும் இருக்கும் கரையோர சமூகங்களில் வாழும் குழந்தைகளிடமிருந்து பெற்ற ஊக்கம், சுனாமி பேரிடர்களில் உயிர்தப்பியவர்கள் கூறிய கதைகள் ஆகியவற்றைக் கொண்டு இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டது.

சந்தை, வரைபடம், கருவிப்பெட்டி, இருபத்தி நான்கு விளையாட்டு நிலைகள் ஆகிய நான்கு முக்கிய பகுதிகளில் விளையாட்டு இடம்பெறும். அவற்றில், மக்களை வெளியேற்றும் கற்பனைச் சூழ்நிலைகளும் இருக்கும். விளையாட்டாளர்கள் சுறுசுறுப்பாக செயல்படவேண்டும். அதோடு, எர்த் கேர்ல் கொடுக்கும் பொது அறிவு, குறிப்புகள், கருத்துகள் ஆகியவற்றையும் கவனிக்கவேண்டும். மேலும், சந்தையிலுள்ள மக்களிடம் பேசி சுனாமியைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல், சரியான கருவிகளைத் தேர்ந்தெடுத்தல், இடத்தை ஆராய்தல், சரியான முடிவுகளை எடுத்தல் ஆகியவையும் இதில் உண்டு. விளையாட்டாளர்களின் வெற்றி, அவர்கள் எந்தளவு சூழ்நிலைகளை சமாளிக்கிறார்கள் என்பதைப் பொருத்திருக்கிறது.

IMG_0327

விளையாட்டாளர்கள் ஒவ்வொரு நிலையையும் கடக்கவேண்டும். அதில் சரியான கருவிகளைக்; கொண்டு பலவீனமான அம்சங்களைத் தேடிக் கண்டறிந்து மேம்படுத்த வேண்டும். விளையாட்டாளர் பயன்படுத்தும் உத்தி, கூட்டமான சூழ்நிலைகளைச் சமாளிக்க உதவ வேண்டும்.

IMG_0325.jpg

சந்தையில், விளையாட்டாளர்கள் சுனாமிப் பற்றிய வெவ்வேறு கருத்துகளைக் கேட்பர். அவற்றில் உண்மை, பொய் இரண்டையும் அவர்கள் தங்களுடைய தீர்மானத்தைப் பயன்படுத்தி வேறுபடுத்தவேண்டும்.

IMG_0326.jpg

விளையாட்டு நிலையின் கடின அளவைப் பொருத்தும், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், கல்வி ஆகிய மூன்று விதமான கருவிகளின் அடிப்படையிலும் கருவிப்பெட்டி தகுந்த பணத்தை அளிக்கும்.

எர்த் கேர்ல் 2 விளையாட்டின் முக்கிய குறிக்கோள் கரையோர சமூகங்களில் வாழும் மக்களைக் காப்பாற்றுவதே ஆகும்.

இந்த விளையாட்டு கீழ்காணும் அம்சங்களைப் பற்றியது:

உயிர்பிழைத்தல்
ஆராய்தல்
ஈடுபடுதல்
சுறுசுறுப்புடன் கற்றல்
இணைந்து செயல்படுதல்
கண்டறிதல்
உத்தி
எர்த் கேர்ல் 2 விளையாட்டு ஐபேட், ஆண்ரொய்ட் கைக்கணினி ஆகியவற்றில் இயங்கும்.